மருந்தகங்களில் போதை மாத்திரைகள் விற்பனை - விசாரணைக்கு நட...
News
மருந்தகங்களில் போதை மாத்திரைகள் விற்பனை - விசாரணைக்கு நடவடிக்கை!
மருந்தகங்கள் என்ற போர்வையில் சிலர் போதை மாத்திரைகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
இதனைத் தடுக்கும் நோக்கில் மாவட்ட மட்டத்தில் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருந்தக உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை மீறுபவர்களுக்கு எவ்வித வேறுபாடுமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.