New Updates! Fresh news just arrived.

அட்டாளைச்சேனையில் போதை ஒழிப்பு வார விழிப்புணர்வு நடவடிக்...

News

அட்டாளைச்சேனையில் போதை ஒழிப்பு வார விழிப்புணர்வு நடவடிக்கைகள்!

March 4, 2026 7:21 pm
அட்டாளைச்சேனையில் போதை ஒழிப்பு வார  விழிப்புணர்வு நடவடிக்கைகள்!
போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை (2026.03.01 முதல் 2026.03.07 வரை) முன்னிட்டு, இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஒலுவில் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் பொதுமக்களிடையே வலுவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரின் வழிகாட்டலில், பிரதேச செயலக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ. எல். சனீர் ஒருங்கிணைப்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களில் 'போதை ஒழிப்பு' ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

மேலும் அரச அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

அத்துடன் போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான இளம் சமூகத்தை உருவாக்குவதே நமது இலக்கு. இந்த வாரம் முழுவதும் தொடரும் இந்தப் பிரச்சாரத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்பதன் மூலம், நம் பிரதேசத்தை போதைப்பொருள் அற்ற சூழலாக மாற்ற முடியும்.
போதை ஒழிப்பு - நமது பொறுப்பு!இளைஞர்களைப் பாதுகாப்போம்! சமூகத்தைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இச்செயற்றிட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now