New Updates! Fresh news just arrived.

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போதைப்பொருள் ...

News

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போதைப்பொருள் பாவனையாளர்கள்!

October 6, 2026 11:45 am
யாழில் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போதைப்பொருள் பாவனையாளர்கள்!
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் - சகாயபுரம் (J/150) என்னும் கிராமத்தில் அண்மைக்காலமாக போதைப்பொரும் பாவனையாளர்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அங்கு உள்ள காணி ஒன்றில் கூடுகின்ற குழுவினர் போதைப்பொருளை பாவித்துவிட்டு சமூகத்திற்கு ஒவ்வாத செயல்களை செய்வதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை மாணவர்கள் தமது கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர்.

மோட்டார் சைக்கிள்களை ஆபத்தான முறையில் செலுத்துதல், கூச்சலிடுதல், வீதியில் செல்பவர்களை வழிமறித்தல், போக்குவரத்துக்கு இடையூறாக செயற்படல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து இளவாலை பொலிஸாருக்கு தெரியப்படுத்தினாலும் அவர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட தரப்பினரை சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now