மொனராகலையில் அதிகாலை விபத்து – ஐவர் உயிரிழப்பு: இருவர் கை...
News
மொனராகலையில் அதிகாலை விபத்து – ஐவர் உயிரிழப்பு: இருவர் கைது
மொனராகலை – கும்புக்கன பகுதியில் நேற்று (21) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
உழவு இயந்திரமும் டிப்பர் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. டிப்பர் லொறியில் பயணித்த 10 பேரில் எட்டு பேர் காயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஐவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஜை வழிபாட்டில் கலந்துகொள்வதற்காக குடும்பத்தினருடன் டிப்பர் லொறியில் பயணித்தபோதே அவர்கள் விபத்தில் சிக்கியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்த ஆர்.டி. ஷெஹான் எரங்க (20), நிரோஷன் தேவேந்திர (55), ஏ.எம். திலகரத்ன பண்டார (56), பசிந்து தினேஷ் (21) மற்றும் தாரக மதுஷான் (31) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் 56 வயதான ஏ.எம். திலகரத்ன பண்டாரவும், 21 வயதான பசிந்து தினேஷும் தந்தை மற்றும் மகன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், டிப்பர் லொறியின் சாரதியும் உழவு இயந்திரத்தின் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.