கொலம்பியாவில் நிலநடுக்கம் – உயிரிழப்பு 111 ஆக அதிகரிப்பு ...
News
கொலம்பியாவில் நிலநடுக்கம் – உயிரிழப்பு 111 ஆக அதிகரிப்பு
கொலம்பியாவின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அனர்த்தத்தில் ரிசாரல்டா மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், காளி நகரிலும் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக போகொடா மற்றும் மெடலின் நகரங்களில் இருந்து பேரிடர் நிவாரணக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கொலம்பிய புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, நாட்டின் பசிபிக் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சொக்கோ மாகாணத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் அருகே நிலநடுக்கத்தின் மையப்பகுதி காணப்பட்டுள்ளது. சுமார் 96 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தினால் கிப்தோ உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதேவேளை, பெரெய்ரா, மனிசாலேஸ், கிப்தோ, ஆர்மீனியா, கார்தாகோ மற்றும் புவேனவென்ச்சுரா ஆகிய நகரங்களின் விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொலம்பியாவின் ஒன்பது மாகாணங்கள் மற்றும் 32 மாகாணத் தலைநகரங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
இதன் அதிர்வுகள் கொலம்பியாவைத் தாண்டியும் உணரப்பட்டுள்ளன. அண்டை நாடான வெனிசுலாவின் தாசிரா மாநிலம், பாரினாஸ் மற்றும் பார்கிசிமெட்டோ உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.