New Updates! Fresh news just arrived.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - இலங்கைக்கு ஆபத்து இல்லை - ...

News

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - இலங்கைக்கு ஆபத்து இல்லை

August 15, 2026 7:24 am
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்  - இலங்கைக்கு ஆபத்து இல்லை
இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டப் பகுதியில் இன்று (15) அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

முதன்மை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5.9, 5.6 மற்றும் 6.1 ரிக்டர் அளவுகளில் மேலும் மூன்று அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.

நிலநடுக்கத்தின் தாக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேசிய தேசிய புவியியல் நிலையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதையடுத்து கடற்கரை மற்றும் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து விலகி பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில அதிர்வுகள் குறித்து இலங்கையின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையமும் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு சுனாமி ஏற்படக்கூடிய எந்தவித அச்சுறுத்தலும் தற்போதைய நிலவரத்தில் இல்லை என அந்த மையம் தெரிவித்துள்ளது.

இதனால் இலங்கையின் கடலோரப் பகுதிகளில் வழக்கமான நடவடிக்கைகளை பாதுகாப்பாக தொடர முடியும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் குறிப்பிட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now