வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்: இதுவரை 32 பேர் பலி! - G...
News
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்: இதுவரை 32 பேர் பலி!
வெனிசுலாவின் தலைநகர் கராகஸுக்கு அருகில் இன்று (25) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதோடு, பெருமளவிலானோர் காயமடைந்துள்ளதுடன், இதன் தாக்கம் கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தினுடைய தகவலின்படி, மொண்டல்பான் பகுதியில் இருந்து 13.2 கிலோமீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 7.1 ரிக்டர் அளவாக குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மேலும், நிலநடுக்கம் காரணமாக கராகஸிலுள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், அங்கிருந்த மக்கள் அந்த இடங்களினை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையானது தெரிவிர்ர்த்துள்ளது.
இதேவேளை, வெனிசுலாவில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்ட நிலையில் இதனால் தலைநகரிலுள்ள சில கட்டிடங்கள் இடிந்து விழுந்து கடுமையான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
குறித்த இரு நிலநடுக்கங்களைத் தொடர்ந்து வெனிசுலா மற்றும் அதற்கு அருகில் உள்ள கரீபியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.