New Updates! Fresh news just arrived.

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக...

News

வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,450 ஆக அதிகரிப்பு!

June 29, 2026 3:02 pm
வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,450 ஆக அதிகரிப்பு!
வெனிசுவேலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிச்டர்கள் அளவிலான சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரினுடைய எண்ணிக்கை 1,450 ஆக அதிகரித்துள்ளது.


குறித்த நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுவேலாவிற்கு அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் 2,600க்கும் மேற்பட்ட அதிநவீன வசதிகளோடு கூடிய மீட்புக் குழுவினர் களமிறங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளமையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

இதன்படி, பாதிப்பு குறித்து அந்நாட்டு தேசிய சட்டமன்றத் தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி,
1,450 பேர் உயிரிழந்துள்ளதோடு, 3,150 பேர் காயமடைந்துள்ளதாகவும், 12,721 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிலநடுக்கம் ஏற்பட்டு மிக முக்கியமான 72 மணித்தியாலங்களானது சனிக்கிழமை மாலையோடு கடந்துவிட்டமையால், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளானது குறைந்து வருவதாக சுவிட்சர்லாந்து மீட்புக் குழுவினுடைய தலைவர் செபாஸ்டியன் யூக்ஸ்டர் கவலை வெளியிட்டுள்ளார்.

இருந்தபோதிலும், ஞாயிற்றுக்கிழமை வரை இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு தந்தையும் மகனும் உயிரோடு மீட்கப்பட்டதினால் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மீட்பு மற்றும் மீட்புக்குப் பிந்தைய பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றமையால் இன்றும் மக்கள் உயிருடன் மீட்கப்படுவதால் பணிகள் நிறுத்தப்பட மாட்டாது.

எங்களினுடைய இறுதி நம்பிக்கை இன்னும் உயிர்ப்புடன் உள்ளதாக அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now