இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்
News
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நில அதிர்வுகள் பதிவாகி வரும் நிலையில், இன்று (17) அதிகாலை மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
புளோரஸ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
எனினும், புதிய நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கு முன்னர் கடந்த 15ஆம் திகதி இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் பதிவாகியிருந்தன.
அந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் 9,200க்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலநடுக்கத்தையடுத்து சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், கடல்வழிப் போக்குவரத்து சேவைகளையும் இந்தோனேசிய துறைமுக அதிகாரசபை தற்காலிகமாக நிறுத்தியிருந்தது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் ஏற்பட்ட மின்சாரத் தடையை சீரமைத்து, மின்சார விநியோகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.