ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தற்போதைய அரசாங்கத்தின் விசாரணை...
News
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தற்போதைய அரசாங்கத்தின் விசாரணைகள் குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் விசேட அறிவிப்பு
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றம் கண்டு வருவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில், உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் முக்கியமாக கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனைமுன்னிட்டு இன்று குறித்த ஆலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனைகளின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தாக்குதல்கள் தொடர்பாகத் தங்கள் கடமைகளை ஆற்றத் தவறிய ஜனாதிபதிகள், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தொடங்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தபோதிலும், சட்டமா அதிபரும் அவரது திணைக்களமும் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்வதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
தாக்குதல்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட நபர்களை, அவர்களின் தகுதியைப் பொருட்படுத்தாமல், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரிப்பது அவசியம் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் மேலும் கூறினார்.
"ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியைக் கண்டுபிடிப்பது, நீதியை உறுதி செய்வதும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவதும் ஆகும்," என்று அவர் கூறினார்.
காலப்போக்கில் உண்மை மங்கிவிட அரசாங்கம் அனுமதிக்காது என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு பேராயர் அவர்களும் கேட்டுக்கொண்டார்.
2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணர, ஒரு விரிவான, உண்மை அடிப்படையிலான விசாரணையை நடத்துமாறு அவர் ஜனாதிபதியை வலியுறுத்தினார். மேலும், தற்போதைய முயற்சிகள் தொடரும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.
உண்மை வெளிப்படும் வரை நீதிக்கான தங்களின் போராட்டம் ஓயாது என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தினார்.