உயிர்த்த ஞாயிறு வழக்கு: பிரதிவாதிகளின் எழுத்துமூல வாதங்கள...
News
உயிர்த்த ஞாயிறு வழக்கு: பிரதிவாதிகளின் எழுத்துமூல வாதங்கள் சமர்ப்பிப்பு!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள 24 பிரதிவாதிகளும் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தமது எழுத்துமூல வாதங்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.
நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே பிரதிவாதிகள் சார்பாக எழுத்துமூல வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
நவ்பர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.