New Updates! Fresh news just arrived.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலேய...

News

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலேயின் மனு பரிசீலனை ஒத்திவைப்பு!

July 14, 2026 3:25 pm
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலேயின் மனு பரிசீலனை ஒத்திவைப்பு!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து காவலில் வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேலதிக பரிசீலனைக்காக இந்த மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (14) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன மேலதிக சமர்ப்பிப்புகளை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்தே, மனு மீதான மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now