75 நாட்களை கடந்தும் உலகெங்கும் ஈழத்தின் திரைப்படம் -அந்தோ...
News
75 நாட்களை கடந்தும் உலகெங்கும் ஈழத்தின் திரைப்படம் -அந்தோனி
ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில், சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி அண்மையில் வெளியாகிய அந்தோனி திரைப்படம் ??வது நாளை கடந்தும் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வரும் நிலையில் நேற்று யாழ்ப்பாணம் ரீகல் திரையரங்கில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.
இத்திரையிடலில் இலங்கை கடற்தொழிற்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன் கருணாநாதன், ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டதோடு
யாழ் மாநகரசபையின் புதிய ஆணையாளர் அரவிந்தராஜ் டெனிசியஸ், உமாகரன் இராசைய்யா மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு திரைப்படத்தை பார்வையிட்டனர்.
திரைப்படத்தை பார்வையிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் திரைப்படகுழுவிற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.