New Updates! Fresh news just arrived.

ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக ஒழுக்காற்று விசாரணை...

News

ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கோரிக்கை!

October 23, 2026 4:17 pm
ஏறாவூர் வைத்திய அத்தியட்சகரை உடனடியாக ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கோரிக்கை!
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையினுடைய வைத்திய அத்தியட்சகர் தனது முகநூலில் முஸ்லிம் சமூகத்தினை புண்படுத்தின்ற விதத்தில் வெளியிட்ட கருத்தானது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சரான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேலும்,, அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்

ஏறாவூர் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மருத்துவர் வருண சம்பத் வண்டார அவர்கள் தனது முகநூலில் ஏறாவூரில் பள்ளிவாசல்களில் தொழுகைக்காக அழைக்க ஒலிக்கப்படும் பாங்கு சம்பந்தமாகவும், முஸ்லிம்களினுடைய பெண்களின் உடலை மறைக்கும் ஹிஜாப் உடை சம்மந்தமாகவும் மோசமான வார்த்தை பிரயோகங்களினை பிரயோகித்து முஸ்லிம் சமூகத்தினை காயப்படுத்துகின்ற கருத்தினை பொதுவெளியில் வெளியிட்டுள்ளார்.

இவருடைய குறித்த கருத்தானது இன்று ஏறாவூர் பிரதேசத்தில் மட்டுமல்ல, நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியிலும் பெரும் அதிர்வலைகளினை தோற்றுவித்துள்ளது.

அண்மையில் கூட அக்குரணையைச் சேர்ந்த மருத்துவர் துஷார எச். குலதுங்கேவும் விபத்தில் உயிரிழந்த முஸ்லிங்கள் விடயத்தில் முஸ்லிம்களினை புண்படுத்துகின்ற விதத்தில் கருத்துக்களினை வெளியிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக இப்படியான கருத்துக்கள் வருவது இன நல்லுறவுக்கு ஆரோக்கியமானதில்லை. ஆகவே, ஏறாவூர் வைத்தியசாலையினுடைய வைத்திய அத்தியட்சகர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு பிரதேசத்தின் வைத்திய பொறுப்பாளராக இருந்து கொண்டு இப்படி கூறியிருப்பது, அந்த வைத்தியசாலையினை நம்பி சிகிச்சை பெறுகின்ற மக்களினுடைய மனநிலையில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும்.

இப்படியான வைத்திய அதிகாரியினுடைய கருத்துக்கள் இலங்கை மருத்துவ சபையினுடைய அடிப்படை கோட்பாட்டுக்கு விரோதமானதும், அதேநேரம் இலங்கையில் இனவன்முறையினை தூண்டுகின்ற வகையில் அமைந்துள்ளதாலும் இலங்கை சட்ட திட்டங்களுக்கும் முரணான நடவடிக்கையாக இருப்பதனாலும் இது சம்பந்தமாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் குறிப்பாக சுகாதார அமைச்சர், கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சினுடைய செயலாளர் போன்றவர்கள் உடனடியாக தலையிட்டு உரிய ஒழுக்காற்று விசாரணையை எடுக்க முன்வரவேண்டும்

இப்படியான ஒருவர் அங்கு தொடர்ந்து கடமையாற்றுவதினை மக்கள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள தயாராகவில்லை. ஆகவே, ஏறாவூர் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மருத்துவர் வருண சம்பத் வண்டார அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கையினை சுகாதார அமைச்சர் வேகமாக எடுப்பார் என்கின்ற நம்பிக்கையை எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now