New Updates! Fresh news just arrived.

நடைமுறைக்கு வரும் தடை - வழங்கப்பட்டது கடும் உத்தரவு - Gur...

News

நடைமுறைக்கு வரும் தடை - வழங்கப்பட்டது கடும் உத்தரவு

April 9, 2026 1:23 pm
நடைமுறைக்கு வரும் தடை - வழங்கப்பட்டது கடும் உத்தரவு
சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படும் உபசரிப்பு நடவடிக்கைகள் மற்றும் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் கடுமையான விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

சில பொலிஸ் நிலையங்களில் புத்தாண்டு உபசரிப்புகளை நடத்துவதற்காக உத்தியோகத்தர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும், வர்த்தக சமூகத்தின் உதவியுடன் விருந்துகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் அன்பளிப்புப் பொதிகள் அல்லது பரிசு வவுச்சர்களை வழங்கக்கூடாது. சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் அத்தகைய பொருட்களைப் பொறுப்பேற்கவும் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக சமூகம் அல்லது வெளித்தரப்பினரின் நிதிப் பங்களிப்புடன் பொலிஸ் நிலையங்களில் புத்தாண்டு விருந்துகளை நடத்தக் கூடாது எனவும், உபசரிப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு உத்தியோகத்தருக்கு 250 ரூபாய் வீதம் பொலிஸ் வெகுமதி நிதியத்திலிருந்து ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல்களை மீறும் உத்தியோகத்தர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மேற்பார்வை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now