New Updates! Fresh news just arrived.

இந்து சமுத்திரத்தை நெருங்கும் எல்நினோ: நீரை சிக்கனமாக பயன...

News

இந்து சமுத்திரத்தை நெருங்கும் எல்நினோ: நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பேராசிரியர் நாகமுத்து பிரதீப ராஜா தெரிவிப்பு!

July 12, 2026 10:31 am
இந்து சமுத்திரத்தை நெருங்கும் எல்நினோ: நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பேராசிரியர் நாகமுத்து பிரதீப ராஜா தெரிவிப்பு!
மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்து சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் யூலை தொடக்கம் அக்டோபர் மாதம் வரை வெப்ப தாக்கத்தைச் செலுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியரும் கலை பீடாதிபதியுமான நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை யாழ். கலட்டி வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஏற்பாடு செய்த எல்நினோ தொடர்பான விவசாய போதன ஆசிரியர்கள் மற்றும் கடற்தொழில் சார்ந்தவர்களுக்கான செயல்மர்வில் பங்கு பற்றிக் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கடல் வெப்பம் இலங்கை மற்றும் மாலைதீவில் அதிக தாக்கத்தை செலுத்த வாய்ப்புகள் உள்ளது.

இலங்கையை பொறுத்தவரையிலும் குறிப்பாக வட மாகாணத்தினுடைய முல்லைத்தீவு, மன்னார் , கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாரிய நீருக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும்.

நிலத்தின் ஊடாக வெப்பத்தை கடத்துவதிலும் பார்க்க 16 மடங்கு வேகமாக நீரின் ஊடாக வெப்பம் கடத்தப்படுகின்ற நிலையில் இந்து சமுத்திரக்கடைபரப்பில் ஏற்படுகின்ற கடல் வெப்ப ஏற்றம் வேகமாக ஏனைய பகுதிகளுக்கும் பரவும்.

ஜூலை செப்டம்பர் மாதங்களில் அதிகமான வறட்சியை ஏற்படுத்துகின்ற எல்நினோ அக்டோபர் நவம்பர் மாதங்களில் பாரிய மழை வீழ்சியையும் ஏற்படுத்தும்.

இருந்தாலும் இந்த தாள முக்கங்கள் அக்டோபர் மாதத்திற்கு பின்னரான காலப் பகுதியிலே ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கும் நிலையில் அதுவரையான காலப் பகுதியில் அதிக வரட்சியே நிலாவும்.

ஆகவே எல்நினோ இந்து சமுத்திரத்தை அண்மித்துள்ள நிலையில் பொதுமக்கள் நீர் முகாமைத்துவத்தை சரியாகப் பின்பற்றி அதிக வெப்பத்தினால் ஏற்படுகின்ற நீர்த்தட்டுப்பாட்டினை சமாளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட முன் வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறிரங்கன், யாழ். மாவட்ட கடற்தொழில் நீரயல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ்.அகிலன் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு ஜான்சன் பிரிடாரோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now