எல் நினோ தாக்கம்: 81,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு! - Gu...
News
எல் நினோ தாக்கம்: 81,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
எல் நினோ காலநிலை தாக்கத்தால் இலங்கையின் 7 மாவட்டங்களில் வறட்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 23 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு நிவாரண நடவடிக்கையாக குடிநீர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 பேருக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் குடிநீர் தேவைக்காக அதிகளவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள 7 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 10,264 குடும்பங்களைச் சேர்ந்த 33,023 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 9,547 குடும்பங்களின் 28,523 பேருக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 2 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 2,537 குடும்பங்களைச் சேர்ந்த 7,882 பேருக்கும் குடிநீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.