ஜூலை மாதம் முதல் தீவிரமடையும் எல் நினோ - உலக வானிலை அமைப்...
News
ஜூலை மாதம் முதல் தீவிரமடையும் எல் நினோ - உலக வானிலை அமைப்பு கணிப்பு
ஜூலை மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில்
உலகளாவிய ரீதியில் வெப்பமான காலநிலை ஏற்படுவதற்குக் காரணமான 'எல் நினோ' காலநிலை நிகழ்வு, மேலும் அதிகரிக்கக்கூடும் என உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது.
எல் நினோ காலநிலை 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது பலவீனமானது, மிதமானது, தீவிரமானது மற்றும் மிகத் தீவிரமானது என்ற 4 பிரிவுகளாகும். இம்முறை எல் நினோ நிகழ்வு மூன்றாவது தீவிரமான உச்சக் கட்ட நிலையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் உருவாகியுள்ள வலுவான கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பான அளவை விட அசாதாரணமாக அதிகரிப்பதால் ஏற்படும் கால நிலை மாற்றமே "எல் நினோ" என அழைக்கப்படுகிறது.
இது பொதுவாக 2 முதல் 7 வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படுவதுடன், 9 மாதங்கள் தொடக்கம் ஒரு வருடம் வரை நீடிக்கக் கூடியது.
அதாவது 3-ஆவது உச்சக் கட்ட நிலை என்பது, கடல் வெப்பநிலை இயல்பான நிலையை விட 1.5°C தொடக்கம் 2.0°C வரையிலான அளவில் அதிகரிப்பதைக் குறிக்கிறது.
அதே போல இலங்கை போன்ற பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளுக்கு இந்த எல் நினோ நிலைமை நேரடித் தாக்கங்களை ஏற்படுத்தும். நெல், மரக்கறி மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்குத் தேவையான தண்ணீரின் பற்றாக்குறை ஏற்படுவதன் விளைவாக விளைச்சல் குறையக்கூடும்.
பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைவதால், நீர்மின் உற்பத்தி நிலையங்களில் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைதல், சூரிய வெப்பத்தின் தாக்கம் (Sunstroke) மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் விகிதம் அதிகரிக்கக் கூடும்.
உலகளாவிய காலநிலை மாற்றத்தின் காரணத்தினால் மனித நடவடிக்கைகளால் வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்கள் (Greenhouse gases), இயற்கையாக ஏற்படும் இந்த எல் நினோ நிலைமைகளின் தீவிரத்தை வழமையை விட கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.