குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பரிதாபமா...
News
குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு: நீண்ட போராட்டத்தின் பின் சடலம் மீட்பு!
அம்பாறை மாவட்டத்தினுடைய சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்ற 63 வயதுடைய முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவமானது இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.
இன்று காலை சுமார் 11.40 மணியளவில் இடம்பெற்றகுறித்த துயரச் சம்பவத்தில், வளத்தாப்பிட்டி பகுதியினை சேர்ந்த மூன்று பிள்ளைகளினுடைய தந்தையான ராஜு (வயது 63) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாக; குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது அவர் திடீரென நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படும் நிலையில்.சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் அம்பாறை மாவட்ட உயிர் காப்பு மற்றும் அவசர மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதோடு, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நீண்ட நேர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் பின்பு முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தினை சட்ட மருத்துவ நடவடிக்கைகளுக்காக மீட்டுள்ளதோடு, உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளினை முன்னெடுத்து வரும் நிலையில் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரியான ஏ.எச். அல் ஜவாஹிர் மேற்கொண்டுள்ளார்.
இந்த திடீர் உயிரிழப்பு வளத்தாப்பிட்டி பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நூருல் ஹுதா உமர்