முகமாலையில் முதியவர் சடலமாக மீட்பு: பளை பொலிஸார் விசாரண!...
News
முகமாலையில் முதியவர் சடலமாக மீட்பு: பளை பொலிஸார் விசாரண!
நேற்றையதினம் காணாமல் போன முதியவர் ஒருவர், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் இன்று (15) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முகமாலை, பொந்தர் குடியிருப்புப் பகுதியில் நேற்றையதி காணாமல் போனவர் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக உறவினர்கள் நண்பர்கள் இணைந்து அவரை தேடிய நிலையில் கிராமத்திற்கு அருகமையில் சடலமாகக் இனங்காணப் பட்டுள்ளார்.
இதன்படி, சடலமாக மீட்கப்பட்டவர் முகமாலை வடக்கு பகுதியினை சேர்ந்த 71 வயதுடைய இளையவன் நல்லதம்பி என்கின்ற நபர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து பளை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும்,சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பு.கஜிந்தன்