New Updates! Fresh news just arrived.

யாழில் மகள் மூட்டிய தீயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வயோ...

News

யாழில் மகள் மூட்டிய தீயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வயோதிப தாய்!

January 29, 2026 10:25 pm
யாழில் மகள் மூட்டிய தீயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வயோதிப தாய்!
யாழில் மகள் மூட்டிய தீயில் வயோதிப தாயொருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. அரியாலையினை சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கடைக்கு சென்றுள்ளார். இதன்போது தாயார் வீட்டு அறையில் உறங்கிக்கொண்டு இருந்தார்.

இதன்போது ஜன்னல் வழியாக தீயானது உள்ளே சென்று கொடியில் இருந்த ஆடைகளில் பற்றி, வீட்டு கூரை மரங்களிலும் பற்றியது. இதன்போது குறித்த வயோதிப பெண் படுக்கையில் இருந்த நிலையில் அவர்மீதும் தீ பற்றியது.

அவர் அவலக்குரல் எழுப்பிய நிலையில் அருகில் உள்ள வீட்டில் வசித்த மற்றைய மகள் ஓடிவந்து அவரை காப்பாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளினை திடீர் மரண விசாரணை அதிகாரியான நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now