New Updates! Fresh news just arrived.

வயோதிபர் கொலை: மருமகன் தப்பியோட்டம்!

News

வயோதிபர் கொலை: மருமகன் தப்பியோட்டம்!

October 11, 2026 2:45 pm
வயோதிபர் கொலை: மருமகன் தப்பியோட்டம்!
நிட்டம்புவ - தங்கொல்லவத்த பகுதியில், நேற்று (10) மாலையில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் படுகாயமடைந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, குறித்த நபருக்கும் அவரது மருமகனுக்கும் (மகளின் கணவர்) இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றிய நிலையில், இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், வயோதிபர் வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துதுடன்,

இந்தச் சம்பவத்தில் மேல் தங்கொல்லவத்தை பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த குற்றச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவான 26 வயதுடைய சந்தேக நபரினை கைது செய்வதற்காக நிட்டம்புவ நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளினை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now