சுவிஸில் இருந்து வந்த முதியவர் படுகொலை: இருவர் கைது! - Gu...
News
சுவிஸில் இருந்து வந்த முதியவர் படுகொலை: இருவர் கைது!
சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பகுதிக்கு வருகை தந்திருந்த முதியவர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டதோடு, நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்டிருந்தன.
இதன்படி, குறித்த கொலையினை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (06) அதிகாலை யாழ்ப்பாண பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்குகின்ற புலனாய்வு பிரிவிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் இருவர் தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுவதோடு, அவர்களிடமிருந்து சில சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளினை மேற்கொண்ட பின்னர் அவர்களினை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்