New Updates! Fresh news just arrived.

பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளர் தெரிவு!

News

பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளர் தெரிவு!

August 22, 2026 10:01 pm
பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளர் தெரிவு!
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய உதவித் தவிசாளர் தெரிவு தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தலைமையில் இன்று (22) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன்(Ex.MMC), அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், முன்னாள் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, முன்னாள் உதவித் தவிசாளர் எப்.நஜீத், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.சி.நியாஸ், ஏ.எல்.பாயிஸ் (ADE), எஸ்.எம்.றியாஸ், றியா மசூர், ஐ.எல்.அஸ்வர், எம்.எல்.றினாஸ், பி.எச்.ஜி.டி சில்வா மற்றும் எதிர்வரும் 24.08.2026 ம் திகதி புதிய உதவித் தவிசாளராக தெரிவு செய்யப்படவுள்ள எம்.எம்.நிஹால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தேசிய காங்கிரஸ் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக புதிய உதவித் தவிசாளராக தெரிவு செய்யப்படவுள்ள எம்.எம்.நிஹால் அவர்களுக்கு ஏகமனதாக ஆதரவளிப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

கே.எ. ஹமிட்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now