16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மோதுண்டு சேதமடைந்த மின்ச...
News
16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மோதுண்டு சேதமடைந்த மின்சார கம்பம் மற்றும் கடைகள்: கல்முனையில் சம்பவம்!
16 வயது சிறுவன் வீதியில் தரித்து நின்ற சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய நிலையில் மின்சார கம்பம், சமிஞ்சை கம்பம், சைக்கிள், பல கடைகள் மோதுண்டு பல சேதங்களும் ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று பிரதான சந்தை வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான சிற்றூர்தியானது மரக்கறி பண்டங்களை சந்தைக்கு எடுத்து வருவது வழமை. இச்சமயம் சாரதி வேலைப்பளு காரணமாக சென்றிருந்த நிலையில் 16 வயதுடைய சிறுவன் குறித்த சிற்றூர்தி சாவியை திருடி வண்டியை இயக்கிச் சென்றமையால் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தின் போது மின்சார கம்பம், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான சமிஞ்சை கம்பம், கடைகளின் பொருட்கள் மற்றும் சைக்கிள் என்பனவும் மோதிச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் விபத்தை ஏற்படுத்திய 16 வயது சிறுவன் அருகில் இருந்த கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளினை கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதன்படி, குறித்த சம்பவத்தில் வாகனத்தினை செலுத்தி வந்த நபருக்கு தெரியாமல் சிறுவன் சாவியை எடுத்து திருட்டுத்தனமாக சிற்றூர்தியை எடுத்துச் சென்றிருப்பது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்