New Updates! Fresh news just arrived.

வாக்குறுதி அளித்தபடி மின்சாரக் கட்டணமானது 30% குறைக்கப்பட...

News

வாக்குறுதி அளித்தபடி மின்சாரக் கட்டணமானது 30% குறைக்கப்படும்: எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி!

February 5, 2026 6:02 pm
வாக்குறுதி அளித்தபடி மின்சாரக் கட்டணமானது 30% குறைக்கப்படும்:  எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி!
வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தினை 30 சதவீதத்தினால் குறைப்பதாக எரிசக்தி அமைச்சரான குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய அவர், மின் அலகு ஒன்றிற்காக சராசரி உற்பத்திச் செலவு ஏற்கனவே 37 ரூபாவில் இருந்து 29 ரூபாவாகக் குறைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

"மின் அலகு ஒன்றினுடைய உற்பத்திச் செலவினை குறைக்காமல் மின்சாரக் கட்டணத்தை குறைக்க முடியாது. தற்போது அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலையே காணப்படுகின்றது. நாம் நாட்டினைப் பொறுப்பேற்ற போது மின் அலகு ஒன்றினுடைய கொள்வனவு அல்லது உற்பத்திச் செலவு 37 ரூபாவாக இருந்தது. தற்போது அதனை 29 ரூபாவாக, அதாவது 22 சதவீதத்தால் குறைக்க எம்மால் முடிந்திருக்கின்றது. எமது இலக்கு அந்தப் பெறுமதியினை 25 ரூபாவாகக் குறைப்பதாகும். அதனைச் செய்து, வாக்குறுதி அளித்தவாறு 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தினை 30 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுப்போம்." என குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now