எரிபொருள் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் நீக்கம்: அரசாங்கம் ...
News
எரிபொருள் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் நீக்கம்: அரசாங்கம் வெளியிட்ட புதிய சுற்றறிக்கை
எரிபொருள் நெருக்கடி காலப்பகுதியில் பொதுச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பொது அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், ஆணையங்கள், அரச திணைக்களங்கள், மாவட்டச் செயலகங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளின் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் விநியோக அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, இந்த கட்டுப்பாடுகள் முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.
செலவு மேலாண்மை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது அதிகாரிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவுகளை மார்ச் 1ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலையின் அடிப்படையில் கணக்கிடுமாறு கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி அரசாங்கம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
எனினும், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையின் மூலம் குறித்த உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஜூலை 1ஆம் திகதி முதல் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற பொது அதிகாரிகளுக்கு சந்தையில் நிலவும் எரிபொருள் விலையின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.