New Updates! Fresh news just arrived.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு அவசர எச்சரிக்கை! - Gu...

News

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு அவசர எச்சரிக்கை!

June 30, 2026 4:27 pm
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு அவசர எச்சரிக்கை!
கங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, குறிப்பிடப்பட்ட கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 3.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அடுத்தடுத்த அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now