தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அவசர எச்சரிக்...
News
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
நாட்டில் நிலவிவரும் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக மண்சரிவு, வெள்ளப் பெருக்கு மற்றும் பிற இயற்கை பேரிடர் அபாயங்கள் தொடர்பில் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமானது பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, இயற்கை பேரிடர்களினால் ஏற்படக்கூடிய உயிர் மற்றும் சொத்து சேதங்களினை குறைப்பதற்கு, உத்தியோகப்பூர்வ எச்சரிக்கைகளினை தொடர்ந்து கவனித்து, அதற்காக அவசர நிலைக்குத் தயாராக இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
இதற்காகப் பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளினை பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்:
அவசரகாலப் பையினை (Emergency Bag) தயார் நிலையில் வைத்திருக்கவும்: அவசர காலத்தில் தேவைப்படும் மருந்துகள், முக்கியமான ஆவணங்கள் மற்றும் உலர் உணவுகள், முதலுதவிப் பொருட்கள் அடங்கிய அவசரகாலப் பையினை தயார் நிலையில் வைத்திருத்தல்.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டினருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் குடும்பத்திலுள்ள அனைவரும் அண்டை வீட்டாரும் அறிந்திருப்பதினை உறுதிசெய்தல்.
வானிலை எச்சரிக்கைகளினை தொடர்ந்து பின்பற்றுதல்: வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் என்பன வெளியிடுகின்ற அறிவிப்புகளினை தொடர்ந்து கவனித்து வருதல்.
மண்சரிவிற்கான முன் அறிகுறிகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருத்தல்: தரையில் வெடிப்புகள் ஏற்படுதல், நீர் மட்டத்தில் திடீர் மாற்றங்கள் மற்றும் மரங்கள் சரிதல் அல்லது சேறு கலந்த நீர் கசிவு ஆகிய நிலச்சரிவிற்கான முன் அறிகுறிகள் தொடர்பில் விழிப்புடன் இருத்தல்.
உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுதல்: ஏதேனும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுமானால், சிறிதும் தாமதிக்காமல் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறுதல்.
உங்களது மற்றும் உங்களது அன்புக்குரியவர்களினுடைய உயிரைப் பாதுகாப்பது உங்களது பொறுப்பாகும் என்பதினால், குறித்த சீரற்ற வானிலை நிலவும் சூழலில் மிகுந்த பொறுப்புடனும் நிதானத்துடனும் செயல்படுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமானது மேலும் நினைவூட்டுகின்றது.