New Updates! Fresh news just arrived.

நீர்கொழும்பு சிறையிலிருந்து கைதிகள் கண்டிக்கு அவசர இடமாற்...

News

நீர்கொழும்பு சிறையிலிருந்து கைதிகள் கண்டிக்கு அவசர இடமாற்றம்!

July 6, 2026 8:06 pm
நீர்கொழும்பு சிறையிலிருந்து கைதிகள் கண்டிக்கு அவசர இடமாற்றம்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த கைதிகளில் ஒரு தொகுதியினர், கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள போகம்பர திறந்தவெளி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நேற்று (05) நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் இன்று (06) தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கைதிகள் சிலரை போகம்பர சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் இருக்கும் கைதிகள் மற்றும் தண்டனை பெற்று சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகள் ஆகிய இரு தரப்பினருக்கு இடையே இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 26 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 7 சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now