மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர...
News
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்
தற்போது நிலவும் கடும் வறண்ட காலநிலை மற்றும் உலகளாவிய எரிபொருள் நெருக்கடி ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, பாடசாலைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ கருத்துத் தெரிவிக்கையில், கடும் வெப்பநிலை நிலவுவதால் மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடந்த மார்ச் 12ஆம் திகதி அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்ட பரிந்துரைகள் அனைத்து பாடசாலைகளிலும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் மின்சாரம் மற்றும் எரிசக்தி பயன்பாட்டைச் சிக்கனமாக முகாமை செய்யும் அதேவேளை, தினசரி நிர்வாகப் பணிகள் மற்றும் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக கடந்த மார்ச் 17ஆம் திகதி வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய சவாலான சூழ்நிலையிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, கல்விச் சேவைகளைத் தடையின்றி வழங்குவதன் முக்கியத்துவத்தை அமைச்சு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள் நெருக்கடி நிலைமையில் பாடசாலை நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வழிகாட்டல்
உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டு சக்தியை முகாமை செய்யும் முகமாக பாடசாலை நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளைப் பின்வரும் அறிவுறுத்தல்களின்படி மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.
01. சகல பாடசாலைகளும் வாரங்களில் நான்கு நாட்கள் மட்டுமே நடாத்தப்படத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மீண்டும் அறிவித்தல் வழங்கப்படும் வரை சகல புதன் கிழமைகளும் பாடசாலை விடுமுறை தினமாகும். ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டில் உள்ள மாணவர்கள் சுயகற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காகப் பொருத்தமான கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள அனைத்து அதிபர்களும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
02. பாடசாலைகளின் பாடங்களைப் பூர்த்தி செய்வதற்கான காலம் வரையறைக்குட்பட்டதாக இருப்பதால் பாடசாலை மற்றும் வெளிநிறுவனங்களால் பாடசாலைகளில் செயற்படுத்தப்படும் நிகழ்ச்சிகள் அல்லது விழாக்களுக்காகப் பாடசாலை நேரத்தைப் பயன்படுத்த வேண்டாம்.
03. பாடசாலைகளின் நடைபெறவிருக்கும் விழா அல்லது நிகழ்ச்சிகளுக்குக் குறைந்த எரிபொருள் பாவனை தவிர்ந்த ஏனைய உயர்மட்ட எரிபொருள் பயன்படுத்தப்படும் வாகனப் பேரணிகள் போன்றவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படல் வேண்டும்.
04. பாடசாலைகளில் மாணவர்களின் பங்குபற்றுதலுடன் திட்டமிடப்பட்ட கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிடப்படவுள்ள கல்விச் சுற்றுலாக்கள் மீண்டும் அறிவித்தல் வழங்கப்படும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படல் வேண்டும்.
நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலைமைகளின் போது செயற்பட வேண்டிய விதம் குறித்த பரிந்துரைகள்
தற்போது நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை தொடர்பாக பின்வரும் பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்:
1. வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் முதலுதவி
தசையிழுவு (Heat Cramps): அதிக வியர்வை காரணமாக நீர்ச்சத்து மற்றும் உப்புத் தன்மை குறைவதால் கை, கால் மற்றும் வயிற்றுப் பகுதிகளில் தசை வலி அல்லது தசைப்பிடிப்பு ஏற்படலாம்.
முதலுதவி: அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் விலகி, குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுக்க வேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும் (ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் அரை கிளாஸ் வீதம்).
வெப்பத்தினால் ஏற்படும் அதிக சோர்வு (Heat Exhaustion): அதிக வியர்வை, உடல் தளர்ச்சி மற்றும் மயக்கம்.
முதலுதவி: குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுத்தல், நீர் அருந்துதல், குளித்தல் அல்லது குளிர்ந்த நீரினால் உடலைத் துடைத்தல்.
வெப்பத்தாக்கம் (Heat Stroke): உடல் வெப்பம் அதிகரித்தல், நாடித் துடிப்பு மற்றும் சுவாச வேகம் அதிகரித்தல், தலைவலி, வலிப்பு அல்லது மயக்க நிலை.
முதலுதவி: குளிர்ந்த நிழலான இடத்திற்குக் கொண்டு செல்லுதல், இறுக்கமான ஆடைகளைத் தளர்த்துதல், குளிர்ந்த நீரால் உடலைத் துடைத்தல். இது ஒரு ஆபத்தான நிலை என்பதால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். அவசர உதவிக்கு 1990 (சுவசரிய) சேவையை அல்லது அருகிலுள்ள மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளவும்.
2. பாடசாலைச் செயற்பாடுகள்
அதிக வெப்பம் நிலவும் நாட்களில் மாணவர்கள் வெளிப்புற அல்லது விளையாட்டு மைதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இடைவேளை நேரங்களில் மாணவர்கள் கடும் வெயிலில் மைதானத்தில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிக நீர் அருந்துவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் இரண்டு குறுகிய இடைவேளைகளை வழங்குவது பொருத்தமானது.
அவசியமற்ற சந்தர்ப்பங்களில் மாணவர்களை வெயிலில் வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும்.
பிராந்திய ரீதியிலான வானிலையைக் கருத்திற் கொண்டு இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகளைத் திட்டமிட வேண்டும்.
3. வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
மாணவர்களுக்குப் போதுமான குடிநீர் வசதிகளை வழங்குவதோடு, அதிக நீர் அருந்த அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
பாடசாலையில் போதிய நீர் வசதி இல்லையெனில், மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் உதவியுடன் மாற்று வழிகளை முன்னெடுக்கலாம்.
வகுப்பறைகளில் காற்றோட்டம் சீராக இருக்க கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும்.
தகரக் கூரை கொண்ட அல்லது அதிக வெப்பம் நிலவும் வகுப்பறைகளைத் தற்காலிகமாகப் பொருத்தமான இடங்களுக்கு மாற்ற வேண்டும்.
4. மாணவர்களின் தனிப்பட்ட தயார்படுத்தல்கள்
அவசியமான போது கழுத்துப் பட்டியை (Tie) அணியாமலிருக்க அல்லது அதன் முடிச்சினைத் தளர்த்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
வெளியில் செல்லும்