ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற அவசர சந்திப்பு!
News

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பானது இன்று (13) நண்பகல் அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இதன்படி, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளுக்கு தீர்வாக, ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதினைத் தொடர்ந்து குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அதற்கமைய, இலங்கையினுடைய எரிபொருள் விநியோகத்தினை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு கட்டமாக, ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர், ரஷ்ய தூதுவருடன் கலந்துரையாடினார்.
இலங்கையினுடைய குறித்த கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்கு அறிவிக்கத் தூதுவர் இதன்போது சம்மதம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு ஒருங்கிணைந்து இதற்குத் தேவையான ஏற்பாடுகளினை செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலின் போது, இலங்கைக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யாவினுடைய ஆதரவு கிடைக்கும் எனவும் ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்பில் தொழிலாளர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரான அனில் ஜயந்த, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினுடைய தலைவரான டி. ஜே. ராஜகருணா மாற்று அமைச்சின் செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.