New Updates! Fresh news just arrived.

பாதுகாப்பு அமைச்சின் அவசர அறிவுறுத்தல்

News

பாதுகாப்பு அமைச்சின் அவசர அறிவுறுத்தல்

August 3, 2026 7:28 pm
பாதுகாப்பு அமைச்சின் அவசர அறிவுறுத்தல்
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய, மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக பொருத்தமான திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமும் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், தேவையான சந்தர்ப்பங்களில் மக்களை விரைவாக அடையாளம் கண்டு, அவர்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு அனுப்பி அவர்களின் உயிர்களைப் பாதுகாக்குமாறு உரிய பிரதேசச் செயலாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு, இவ்வாறு பாதுகாப்பு மையங்கள் அல்லது உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் ஏனைய தேவையான வசதிகளை வழங்குவதற்கு தேவையான நிதியைப் கோர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now