New Updates! Fresh news just arrived.

தென்கிழக்கு வங்கக் கடலில் பயணிக்கும் மீன்பிடிப் படகுகளுக்...

News

தென்கிழக்கு வங்கக் கடலில் பயணிக்கும் மீன்பிடிப் படகுகளுக்கு அவசர எச்சரிக்கை

November 10, 2026 6:29 pm
தென்கிழக்கு வங்கக் கடலில் பயணிக்கும் மீன்பிடிப் படகுகளுக்கு அவசர எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (10) பிற்பகல் 4.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, நவம்பர் 13 ஆம் திகதி பிற்பகல் 4.00 மணி வரை அமுலில் இருக்கும்.

நவம்பர் 13 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்கக் கடல் கடற்பகுதியை ஒட்டி குறைந்த அழுத்தப் பிரதேசமொன்று உருவாகக் கூடிய வாய்ப்புள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து, அதன்பின்னர் 24 மணி நேரத்திற்குள் வலுவான குறைந்த அழுத்தப் பிரதேசமாக மாறுவதற்குக் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அத்திணைக்களம் கணித்துள்ளது.

இதன் காரணமாக, நவம்பர் 14 மற்றும் 15 ஆம் திகதிகள் முதல் வங்கக் கடலை ஒட்டிய கடற்பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, அவ்வப்போது காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடற்றொழில் மற்றும் கடற்சார் சமூகத்தினர் இது தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்துகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now