New Updates! Fresh news just arrived.

சென்னையில் உணர்வு ரீதியாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நி...

News

சென்னையில் உணர்வு ரீதியாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

May 18, 2026 4:10 pm
சென்னையில் உணர்வு ரீதியாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூர்ந்து தமிழ்நாடு - சென்னையில் இன்று (18) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வன்னி அரசு தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்காப்பியன் திருமாவளவன் மற்றும் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் சென்னையில் வசிக்கும் ஈழத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் , அக் கட்சியின் தோழர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என பல நூறு பேர் நினைவேந்தல் நிகழ்வில் உணர்வெழிச்சியுடன் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வில் நினவுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து வன்னியரசு ,பாலாஜி, அர்ச்சுனா இராமநாதன், சண் மாஸ்டர் உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள் இறுதியாக வி.சி.க கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் நிகழ்வில் தனக்கும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமான உறவு குறித்தும், குறிப்பாக ஈழத் தமிழர்கள் தமிழகம் உள்ளிட்ட இந்திய தேசத்தில் எத்தகைய அணுகுமுறைகளைப் பின்பற்றி தமக்கான அரசியல் ஆதரவை வலிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விடயடங்களைச் சுட்டிக்காட்டி சிறப்புரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now