New Updates! Fresh news just arrived.

சீதுவை விடுதியில் மாடியிலிருந்து விழுந்து ஊழியர் உயிரிழப்...

News

சீதுவை விடுதியில் மாடியிலிருந்து விழுந்து ஊழியர் உயிரிழப்பு!

September 17, 2026 9:08 am
சீதுவை விடுதியில் மாடியிலிருந்து விழுந்து ஊழியர் உயிரிழப்பு!
சீதுவை நகரில் உள்ள விடுதியொன்றில் 49 வயதுடைய ஊழியர் ஒருவர் மேல் மாடியிலிருந்து கீழே தள்ளப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின்போது உயிரிழந்த நபர் மற்றொரு ஊழியருடன் மதுபானம் அருந்திய நிலையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போயகனே பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் விடுதியின் மேல் மாடியில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now