மாநகர பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள ஊழியர்:...
News
மாநகர பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள ஊழியர்: பொலிஸார் விசாரணைகள் ஆரம்பம்!
கடமைகளினை உரிய முறையில் செய்யாத ஊழியரிடம் விளக்கம் கோரிய கல்முனை மாநகர சபையினுடைய பதில் ஆணையாளரை, குறித்த ஊழியர் அச்சுறுத்திய சம்பவமானது நேற்று வியாழக்கிழமை (09) கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற நிலையில் இது தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகர சபை எல்லைக்குள் இடம்பெறும் சில குறைபாடுகள் குறித்து தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக, கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளர் நூர்தீன் முகம்மட் நெளபீஸ் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, கடமைக்குச் சமூகமளித்திருந்த போதிலும், ஊழியர் ஒருவர் தனக்குரிய கடமைகளினை முறையாக செய்யவில்லை என்கின்ற விடயத்தினை பதில் ஆணையாளர் கண்டறிந்த நிலையில் இது தொடர்பில் அந்த ஊழியரை அவர் நேரில் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தம்மைக் கேள்வி கேட்ட பதில் ஆணையாளரினை அச்சுறுத்தும் பாணியில் குறித்த ஊழியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்திருப்பதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.
மாநகர சபையினுடைய சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்க பெற்றதையடுத்து, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பொறுப்பதிகாரியினுடைய வழிகாட்டுதலின் கீழ், கல்முனை பொலிஸ் நிலைய பல்வேறு குற்ற தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளினை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளினை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்