New Updates! Fresh news just arrived.

தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

News

தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

September 15, 2026 9:44 am
தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு
தாய்லாந்து அரசு தாய்லாந்தில் நிலவி வரும் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தீர்மானித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (14) குறித்த வேலைவாய்ப்புகளுக்கு இலங்கையர்களை அனுப்புவதற்காக இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையே இரு விசேட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் தாய்லாந்து விஜயத்தின் போதே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான தொழிலாளர் துறையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now