நுரைச்சோலை மின் உற்பத்தி குறித்து வலுசக்தி அமைச்சர் விளக்...
News
நுரைச்சோலை மின் உற்பத்தி குறித்து வலுசக்தி அமைச்சர் விளக்கம்!
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதால் மின் உற்பத்தி அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது நீர்மின் உற்பத்தி போதுமான அளவில் இடம்பெறுவதால் நாட்டின் மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் இரண்டு நிலக்கரி கப்பல்கள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். முதலாவது கப்பல் நாளை (04) நாட்டை வந்தடையவுள்ள நிலையில், இரண்டாவது கப்பல் எதிர்வரும் 12ஆம் திகதி வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல்களில் இருந்து நிலக்கரி தரையிறக்கப்பட்டதும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் மீண்டும் வழக்கமான அளவில் மின் உற்பத்தியை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை எனவும், பொதுமக்கள் இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டில் போதுமான நிலக்கரி கையிருப்பு இல்லாததால் மின் உற்பத்தித்துறையில் தற்போது கடுமையான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.