இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் உத்தியோக...
News
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எரிக் மேயர் தனது உத்தியோகபூர்வ கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் லாண்டோ தலைமையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களில் நீண்டகால அனுபவம் பெற்ற மூத்த வெளியுறவுச் சேவை அதிகாரியாக எரிக் மேயர் உள்ளார். புதிய பதவியை ஏற்கும் முன்னர், குறித்த பிராந்தியத்திற்கான பணியகத்தில் முக்கிய பொறுப்பில் அவர் பணியாற்றியுள்ளார்.
இதேவேளை, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் புதிய தூதுவரை வரவேற்றுள்ளது. அவரது தலைமையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட எதிர்பார்ப்பதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிக் மேயரின் பதவிக் காலத்தில் அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்கள் மற்றும் முன்னுரிமைகள் தொடர்பான விடயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் முக்கியத்துவம் வழங்கப்படும் என அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார உறவுகள், பிராந்திய பாதுகாப்பு, நல்லாட்சி மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எரிக் மேயர் புதிய தூதுவராக பொறுப்பேற்றுள்ளார்.
அமெரிக்கா–இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய தூதுவருடன் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.