New Updates! Fresh news just arrived.

எவன்கார்ட் விவகாரம்: கோப் குழு விசாரணைக்கு நடவடிக்கை! - G...

News

எவன்கார்ட் விவகாரம்: கோப் குழு விசாரணைக்கு நடவடிக்கை!

September 27, 2026 9:22 am
எவன்கார்ட் விவகாரம்: கோப் குழு விசாரணைக்கு நடவடிக்கை!
ரக்னா லங்கா நிறுவனத்தின் கடல்சார் பாதுகாப்பு சேவையில் எவன்கார்ட் நிறுவனத்தை இணைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிதி இழப்பு தொடர்பில் விசாரணை நடத்த கோப் குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, சம்பவம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கோப் குழுவின் தலைவர் நிஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

கோப் குழுவின் முன்னிலையில் ரக்னா லங்கா அதிகாரிகள் அழைக்கப்பட்டபோது, எவன்கார்ட் நிறுவனத்தை கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இணைத்தமை தொடர்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை மீளாய்வு செய்து, அரசாங்கத்திற்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்பை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now