முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளரின் பிணைக் கோரிக்க...
News
முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு!
ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களினை பெற்றதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினுடைய தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றமானது இன்று (08) நிராகரித்துள்ளது.
குறித்த சந்தேகநபருக்கு பிணை வழங்குமளவிற்கு விசேட காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படாமையால், அவரது பிணை கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய, சந்தேகநபரினை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்குமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.