New Updates! Fresh news just arrived.

கொழும்பு மாநகர சபையில் சிறப்பான இப்தார் நிகழ்வு!

News

கொழும்பு மாநகர சபையில் சிறப்பான இப்தார் நிகழ்வு!

March 18, 2026 1:42 pm
கொழும்பு மாநகர சபையில் சிறப்பான இப்தார் நிகழ்வு!
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கொழும்பு மாநகர சபை ஏற்பாடு செய்த விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு, நேற்று (17) கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாநகர முதல்வர் விராய் கெலி பல்தாசர், பிரதி முதல்வர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இப்தார் நிகழ்வை சிறப்பித்தனர். அதேவேளை மதத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் மாநகர சபை ஊழியர்களும் கலந்து கொண்டு நிகழ்வின் மகத்துவத்தை உயர்த்தினர்.

மத நல்லிணக்கம், சமாதானம் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்த இப்தார் சந்திப்பு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு இன, மதங்களைச் சேர்ந்தோர் ஒன்றிணைந்து நோன்பு திறந்தது சமூக ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.

இந்நிகழ்வை கொழும்பு மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் ஒன்றியம் மிகவும் ஒழுங்காகவும் சிறப்பாகவும் ஏற்பாடு செய்திருந்தது. பங்கேற்ற அனைவராலும் பாராட்டப்பட்ட இந்நிகழ்வு, சமுதாய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சியாகக் கருதப்படுகிறது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now