ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வுப் பொருட்கள் காட்சிப்படுத...
News
ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வுப் பொருட்கள் காட்சிப்படுத்தல்!
யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாவாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த காட்சிப்படுத்தல் நாளையதினம் வெள்ளிக்கிழமையும் இடம்பெறவுள்ளது.
குறித்த கண்காட்சியில் எமது முன்னோர் பயன்படுத்திய அரிதான பொருட்கள் மற்றும் பண்டைய பண்பாட்டு எச்சங்கள், வரலாற்றுச் சான்றுகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இக்கண்காட்சியில் ஈழத்தினுடைய பண்டைய வரலாற்றினையும் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தினுடைய தொன்மைச் சிறப்பையும் நேரில் கண்டுகொள்ள முடிகின்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன், மதகுருக்கள், வாழ்நாள் பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராசா மற்றும் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சேமதேவா, யாழ். பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் அனித்தா சசிதரன், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரபாகரமூர்த்தி மற்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், களனி பல்கலைக்கழக மாணவர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் மக்கள் என பலரும் கலந்துகொண்டு தொல்லியல் சின்னங்களை பார்வையிட்டுள்ளனர்.
பு.கஜிந்தன்