New Updates! Fresh news just arrived.

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்க எதிர்பா...

News

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்க எதிர்பார்ப்பு

September 25, 2026 9:54 pm
புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்க எதிர்பார்ப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக கூறியதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய, தற்போது புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள VAT வரியை எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் மாற்றுவதற்கு முடியுமான முயற்சி எடுக்கப்படும் என்றும் மேலும் அது குறித்து சாதகமான நம்பிக்கையைக் கொண்டிருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று 25ஆம் திகதி காலையில் இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் 27ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

"தற்போது புத்தகங்களுக்கு
விதிக்கப்பட்டுள்ள வற் (VAT) வரியை மாற்றுவதற்கு எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் முயற்சி எடுப்பதாகவும், அது பெரும்பாலும் சாத்தியமாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அந்த நம்பிக்கையைக் கொடுக்குமாறு அவர் தம்மை வலியுறுத்தியதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று இக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப (BMICH) வளாகத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now