கபில சந்திரசேனவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
News

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினுடைய முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேனவுக்கு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரைக்கும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏயார்பஸ் விமானக் கொள்வனவு ஒப்பந்தத்தின் போது, 2 மில்லியன் அமெரிக்க டொலரை இலஞ்சமாக பெற்றதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
2011 முதல் 2015 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற குறித்த விமானக் கொள்வனவு விவகாரத்தில் பாரிய நிதி மோசடிகள் நடந்துள்ளதாக நீண்டகாலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஊழல் தொடர்பாக, கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு எதிராக ஏற்கனவே அமெரிக்காவினால் பயணத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.