New Updates! Fresh news just arrived.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்க...

News

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

October 13, 2026 3:11 pm
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
எயார்பஸ் விமானங்களினை கொள்முதல் செய்ததில் இலஞ்சம் பெற்ற சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றமானது இன்று (13) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினுடைய அதிகாரிகளும் சந்தேகநபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த சமர்ப்பணங்களினை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதேநேரம் எயார்பஸ் (Airbus) விமானங்களினை கொள்முதல் செய்ததில் இலஞ்சம் பெற்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கை, நிரந்தர மேல்நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகக் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய வழக்கு விசாரணையின் போதே, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார குறித்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now