New Updates! Fresh news just arrived.

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

News

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

October 13, 2026 4:09 pm
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
சிரிலிய சவிய’ மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷவை, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரின் மேலதிக மருத்துவ அறிக்கைகளை அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அதுவரை பிணை வழங்குவது தொடர்பான கட்டளையை பிறப்பிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now