New Updates! Fresh news just arrived.

முன்னாள் ஜனாதிபதியின் முன்னாள் பிரத்தியோக செயலாளருக்கு மீ...

News

முன்னாள் ஜனாதிபதியின் முன்னாள் பிரத்தியோக செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!

October 21, 2026 1:16 pm
முன்னாள் ஜனாதிபதியின் முன்னாள் பிரத்தியோக செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினுடைய முன்னாள் பிரத்தியோக செயலாளரான சுகீஸ்வர பண்டார எதிர்வருகின்ற 28 ஆம் திகதி வரைக்கும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சுகீஸ்வர பண்டாரவினுடைய வழக்கினை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான தேவை எதுவுமில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளதாகவும் இன்று (21) கோட்டை நீதவான் பசன் அமரசேன குறித்த கட்டளையினை வாசித்துக் காட்டியபோது தெரிவித்தார்.

அவரது மனைவியினுடைய கணக்கு மற்றும் ஏனைய கணக்குகள் தொடர்பில் அறிக்கைகளினை சமர்ப்பிக்குமாறு உரிய வங்கிப் பிரதானிகளுக்கு உத்தரவிட்ட நீதவான், அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைவாக, சுகீஸ்வர பண்டாரவினை இம்மாதம் 28 ஆம் திகதி வரைக்கும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now