New Updates! Fresh news just arrived.

யடியந்தோட்டை போக்குவரத்து பிரிவுக்கா பொறுப்பதிகாரிக்கு வி...

News

யடியந்தோட்டை போக்குவரத்து பிரிவுக்கா பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

June 28, 2026 6:55 pm
யடியந்தோட்டை போக்குவரத்து பிரிவுக்கா பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!
தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பாக, யடியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டிருந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தனது பணிக்காகப் பெற்றிருந்த கைத்துப்பாக்கியைத் தொலைத்ததற்காக, சீதாவகபுர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (27) குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.

26ஆம் திகதியன்று, குறித்த பொறுப்பதிகாரி அலுவல் பணிக்காகப் புறப்படும்போது ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களைத் தன்னுடன் எடுத்துச் சென்றதாகவும், எனினும் மீண்டும் அந்தத் தோட்டாக்களை அவர் ஒப்படைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது..

அவர் காவலில் எடுக்கப்பட்டு, சந்தேக நபர் இன்று ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கு முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான், சந்தேக நபரை 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்தான மேலதிக விசாரணைகளை சீதாவகபுர பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சீதாவகபுர சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரின் சிறப்பு நடவடிக்கைக் குழு தொடங்கியுள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now